“நான்தான் பணம் கொடுத்தேன்… அமீர் அண்ணன் சொல்வது உண்மை” ஆதரவு தந்த சசிகுமார்!

Webdunia
சனி, 25 நவம்பர் 2023 (07:32 IST)
பருத்திவீரன் படம் ரிலீஸாகி 16 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டாலும்  இன்னும் அந்த படத்திற்குப் பின்னால் உள்ள பிரச்சனை தீர்ந்தபாடில்லை. இது சம்மந்தமாக இயக்குனர் அமீர் நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கு 17 ஆண்டுகளாக நடந்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இயக்குனர் அமீர் படத் தயாரிப்புக்குக் கொடுத்த பணத்தை திருடியதாக குற்றம் சாட்டினார். இது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பருத்திவீரன் படத் தயாரிப்புக்கு கடன் கொடுத்து உதவிய இயக்குனர் சசிகுமார் ஞானவேல் ராஜாவைக் கண்டித்து பதிவிட்டுள்ளார்.

அதில் “அண்ணன் அமீர் குறித்த ஞானவேல் ராஜாவின் கருத்துக்களை வன்மையாக கண்டிக்கிறேன். ‘பருத்திவீரன்’ இறுதி கட்ட படப்பிடிப்பிற்கான முழு தொகையையும் அண்ணன் அமீருக்கு நானே கடனாக கொடுத்தேன். எங்களுக்கான பணம் செட்டில் செய்யப்படாமலேயே படம் ரிலீஸ் செய்யப்பட்டது. அவர் சொல்வது உண்மை” எனக் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் சம்மந்தமாக இயக்குனர் அமீரும் நேற்று ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்