பிதாமகன் படத்துக்கு முன்பே அமீர் இயக்கத்தில் இணைந்து நடிக்க இருந்த விக்ரம் & சூர்யா!

வெள்ளி, 24 நவம்பர் 2023 (14:37 IST)
இயக்குனர் பாலா விக்ரம்முக்கு சேது படம் மூலம், நந்தா படம் மூலம் சூர்யாவுக்கும் பிரேக் கொடுத்து அவர்களுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தினார். அதன் பின்னர் இருவரையும் வைத்து பிதாமகன் என்ற மிகப்பெரிய வெற்றிப் படத்தைக் கொடுத்தார். அதன் பிறகு இருவரும் இணைந்து வேறு படங்களில் நடித்ததில்லை.

ஆனால் பிதாமகன் படத்துக்கு முன்பாகவே அமீர் இயக்கத்தில் விக்ரம் மற்றும் சூர்யா ஒரு படத்தில் இணைந்து நடிக்க இருந்ததாக அமீர் தெரிவித்துள்ளார். அமீர் இயக்கிய முதல் திரைப்படம் மௌனம் பேசியதே. அந்த படத்தில் கதாநாயகனாக சூர்யா நடித்திருந்தார்.

ஆனால் முதலில் அந்த கதாநாயக வேடத்தில் முதலில் விக்ரம்தான் நடிக்க இருந்தாராம். அதே படத்தில் செகண்ட் ஹீரோவாக வரும் கண்ணன் என்ற கதாபாத்திரத்தில்தான் சூர்யா நடிக்க இருந்தாராம். ஆனால் சில காரணங்களால்  அந்த படம் அடுத்த கட்டத்துக்கு செல்லாத நிலையில் பின்னர்தான் சூர்யா நடிப்பில் உருவானதாம். இந்த தகவலை இயக்குனர் அமீர் தன்னுடைய சமீபத்தைய நேர்காணலில் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்