தமிழ் சினிமாவில் ஒரு வணிக இயக்குனராக லோகேஷ் கனகராஜ் அடைந்திருக்கும் உயரம் அளப்பரியது. தனது இயக்குநர் பயணத்தை "மாநகரம்" திரைப்படம் மூலம் தொடங்கினார். அதன் பின்வரும் "கைதி", "மாஸ்டர்", "விக்ரம்", "லியோ" போன்ற வெற்றிப்படங்களை இயக்கி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர். தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து ப்ரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
லோகேஷ் தன்னுடைய ஒரு படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்களை மற்ற படங்களிலும் இடம்பெறச் செய்து கிராஸ் ஓவர் முயற்சிகளை மேற்கொண்டார். இது ஹாலிவுட் மற்றும் இந்திய படங்களில் முன்பே மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள்தான் என்றாலும் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் என்பது இப்போது சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் விவாதிக்கப்படும் ஒரு விஷயமாக மாறியுள்ளது.