மணிரத்னம் படத்தை அடுத்து மோகன்ராஜா இயக்கத்தில் சிம்பு

Webdunia
வியாழன், 28 டிசம்பர் 2017 (22:22 IST)
சிம்பு நடித்த 'AAA' திரைப்படம் படுதோல்வி அடைந்தவுடன் இனிமேல் சிம்பு அவ்வளவுதான் என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறின. ஆனால் ஒருசில மாதங்களிலேயே மணிரத்னம் படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரியில் தொடங்கவுள்ளது. அதுமட்டுமின்றி சிம்பு இயக்கி நடிக்கும் ஒரு ஆங்கில படமும் தயாராகி வருகிறது.

இந்த நிலையில் 'தனி ஒருவன்', 'வேலைக்காரன்' என இரண்டு தொடர்ச்சியான சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த மோகன்ராஜாவின் அடுத்த படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படம் ரொமான்ஸ் மற்றும் மியூசிக் சம்பந்தப்பட்ட படம் என்றும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

வேலைக்காரன்' படத்தை அடுத்து அஜித் படத்தை மோகன்ராஜா இயக்குவார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் சிம்பு படத்தை இயக்கவுள்ளதாக செய்தி வெளியாகியிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்