அஞ்சான் படத்தின் தோல்விக்குக் காரணம் இதுதான்… ரி ரிலீஸில் மாற்றம் செய்துள்ளோம்- இயக்குனர் லிங்குசாமி!

vinoth
வியாழன், 4 ஏப்ரல் 2024 (10:39 IST)
சூர்யா நடிப்பில் லிங்குசாமி இயக்க சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய யுவன் இசையமைக்க என கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் கூட்டணியுடன் உருவாகி 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸானது அஞ்சான் திரைப்படம். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு உருவான திரைப்படம் படுதோல்வி அடைந்தது. திரைக்கதை என்ற வஸ்து இல்லாமல் எடுக்கப்பட்ட அஞ்சானை இணையத்திலும், பத்திரிகைகளிலும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் படத்தின் இயக்குனர் லிங்குசாமி கொடுத்த பில்டப்புகளை நம்பி சென்றவர்கள் ஏமாந்ததால் அவரைப் பற்றி மீம்ஸ்களாகப் போட்டு கிழித்தெறிந்தனர். அந்த படத்தில் சறுக்கிய லிங்குசாமி இன்னமும் தலைதூக்கவில்லை. அந்த அளவுக்கு தமிழ் சினிமா கண்டிராத அளவுக்கு அந்த படத்தின் மீதும், இயக்குனர் லிங்குசாமியின் மீதும் ட்ரோல்கள் எழுந்தன.

இந்நிலையில் இப்போது அஞ்சான் திரைப்படம் மீண்டும் ரி ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. இது சம்மந்தமாக பேசியுள்ள இயக்குனர் லிங்குசாமி, “ஒரு படம் வெற்றி அடைவதற்கும் தோல்வி அடைவதற்கும் சில காரணங்களே உள்ளன. குறுகிய காலத்தில் எடுத்த சில முடிவுகளால் அந்த படம் ரசிகர்களிடம் எடுபடவில்லை. இப்போது தேவையில்லாத சில காட்சிகளை எடிட் செய்து படத்தை புதிய வடிவமாக்கியுள்ளோம். விரைவில் படம் ரி ரிலீஸாகும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்