விஷ்ணு விஷால் & கோகுல் இணையும் படத்தின் கதாநாயகி இவர்தான்.. வெளியான தகவல்!

vinoth

வெள்ளி, 29 மார்ச் 2024 (13:15 IST)
ஆர் ஜே பாலாஜியை வைத்து சிங்கப்பூர் சலூன் என்ற படத்தை எடுத்து சமீபத்தில் ரிலீஸ் செய்தார் இயக்குனர் கோகுல். அந்த படம் சுமாரான வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது விஷ்ணு விஷால் நடிப்பு மற்றும் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்த படம் சிம்பு நடிப்பில் தொடங்கப்பட்ட கொரோனா குமார் திரைப்படம்தான் என தகவல்கள் பரவின. ஆனால் அதை இயக்குனர் கோகுல் தரப்பு மறுத்துள்ளது. மேலும் “கொரோனா குமார் படத்துக்கும் இந்த படத்துக்கும் சம்மந்தம் இல்லை. இந்த படம் ஒரு ஆக்‌ஷன் படமாக உருவாக உள்ளது. ஷூட்டிங் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும்” எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இப்போது இந்த படத்துக்கு vibe குமார் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் கொரோனா குமார் படத்துக்கும் இந்த கதைக்கும் சம்மந்தம் இருக்குமா என்ற சந்தேகம் மீண்டும் எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க அதிதி ஷங்கர் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்