நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் திடீர் மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

vinoth

சனி, 30 மார்ச் 2024 (07:25 IST)
நடிகர் டேனியல் பாலாஜி தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவர். சித்தி தொலைக்காட்சி சீரியல் மூலமாக அறிமுகமான அவர் அதன் பின்னர் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு மற்றும் பொல்லாதவன் ஆகிய படங்களில் தன் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களைக் கவர்ந்தவர். தொடர்ந்து வெற்றிமாறனின் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர். தமிழ் தவிர்த்து பிற தென்னிந்திய மொழிப் படங்களிலும் நடித்து வந்தார்.

இப்போது சில படங்களில் நடித்து வரும் அவர் திடீரென மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தியுள்ளார். கொட்டிவாக்கத்தில் வசித்து வந்த அவர் நேற்றிரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 49 வயதாகும் அவரின் இந்த திடீர் மரணம் ரசிகர்களையும் திரையுலகினரையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்