வீடுகளுக்கான கேன் வாட்டர் தரத்தை எப்படி நிர்ணயிப்பது… அரசுக்கு இயக்குனர் சேரன் கோரிக்கை!

Webdunia
திங்கள், 14 ஜூன் 2021 (17:05 IST)

இயக்குனர் சேரன் தமிழ்நாடு அரசுக்கு டிவிட்டர் மூலமாக ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.

சென்னை போன்ற பெருநகரங்களில் குடிநீருக்காக மக்கள் பெரிதும் கேன் வாட்டர்களையே பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் அது சுத்தமானதுதானா அதன் தரத்தை எப்படிக் கண்டுபிடிப்பது என்பது குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும் என இயக்குனர் சேரன் கோரிக்கை வைத்துள்ளார்.

இது சம்மந்தமாக டிவிட்டரில் ‘சென்னை மற்றும் பெருநகரங்களில் வாழும் மக்களுக்கு குடி தண்ணீர் மற்றும் சமையலுக்கான தண்ணீர் பெரும்பாலும் கேன் வாட்டர் சப்ளை மூலமாகத்தான் விலைக்கு கிடைக்கிறது.. தினசரி பயன்பாட்டில் முக்கியமானதான தண்ணீரின் தரம் சோதிக்கப்பட்டு வழங்கப்படுகிறதா என்பதை தெரிந்துகொள்ள எந்த வழியும். பயன்பாட்டாளருக்கு இல்லை. சுத்தமான தண்ணீராக இல்லையெனில் அதுவே நோய் பரவுவதற்கான முதல் காரணமாக மாறும். அரசு இதற்கான ஒரு முக்கிய முடிவு எடுத்தால் முன்னேற்பாடாக இருக்கும். பரிசோதனையும் அரசு முத்திரையும் இருக்கும்படியான அனுமதி வாங்குதல் வழங்குதல் அவசியம்என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்