கொரோனாவால் தள்ளிவைக்கப்பட்ட பாகிஸ்தான் ப்ரிமியர் லீக் இப்போது அபுதாபியில் நடந்து வருகிறது. இந்நிலையில் இதில் கலந்துகொண்டு பாப் டு பிளசிஸ் பீல்டிங்கின்போது சக வீரரான முகமது ஹஸ்னைனுடன் கடுமையாக மோதிக் கொண்டார். இதனால் அவருக்கு தலையில் கடுமையான அடிபட்டது. மைதானத்தில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் ஸ்கேன் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டார்.