கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட யோகி பாபு!

திங்கள், 14 ஜூன் 2021 (16:26 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் யோகிபாபு. இவர் விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி ரோலில் நடித்து வருகிறார். இவருக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். சமீபத்தில் இவர் நடிப்பில் ஓடியியில் வெளியான மண்டேலா படம் நல்ல வரவேற்பைப் பெற்றது..
 
படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சமூக அக்கறையிலும் கவனம் செலுத்தும் யோகிபாபு இந்த கொரோனா காலத்தில் மக்களுக்கு அதுகுறித்த விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் யோகி பாபு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்