ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும் உணவு இன்றி வீதியில் திரிந்து வருகின்றன. இதில் நாய் உள்பட வீட்டு விலங்குகளுக்கு பலர் உதவி செய்ய முன்வந்தாலும் பல விலங்குகள் பசியால் துடித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் வீதியில் பசியோடு திரியும் விலங்குகளுக்கு பீட்டா இந்தியா என்ற அமைப்பு தங்களால் முடிந்த உதவியை செய்து வருகிறது. 24 மணி நேரமும் இந்த அமைப்பினர் தெருநாய்களுக்கு உணவு கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த உதவி காரணமாக பீட்டா இந்தியாவுக்கு உலகெங்கிலும் இருந்து நிதி உதவிகள் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பீட்டா இந்தியா தனது டுவிட்டரில் தாங்கள் 24 மணி நேரமும் விலங்குகளுக்கு பசியைப் போக்க பணிபுரிந்து கொண்டு இருப்பதாகவும் எனவே தங்களுக்கு உங்களால் முடிந்த நிதி உதவியை செய்து தாருங்கள் என்றும் காஜல் அகர்வாலுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே பீட்டா இந்தியாவின் பிராண்ட் அம்பாசிடராக இருந்த காஜல்அகர்வால் விரைவில் நிதி உதவி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது