ரிலீஸூக்கு முன்பே மாமன்னன் படத்தைப் பார்த்து பாராட்டிய தனுஷ்!

Webdunia
புதன், 28 ஜூன் 2023 (13:43 IST)
மாமன்னன் திரைப்படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.  மாரி செல்வராஜ் கர்ணன் படத்துக்குப் பிறகு இயக்கியுள்ளார். படம் நாளை ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் படத்தின் ப்ரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

இந்நிலையில் நடிகர் தனுஷ் மாமன்னன் படத்தைப் பார்த்து பாராட்டியுள்ளார். இது சம்மந்தமாக அவரின் டிவிட்டர் பக்கத்தில் “மாமன்னன் ஒரு உணர்வுப்பூர்வமான படைப்பு. மாரி செல்வராஜை அனைத்துக் கொள்கிறேன். வடிவேலு சார் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இருவரும் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார்கள். அதே போல பஹத் மற்றும் கீர்த்தி சுரேஷின் மகத்தான பங்களிப்பு. திரையரங்குகள் இடைவேளைக் காட்சியில் எழுச்சி கொள்ள போகின்றன. இறுதியில் ஏ ஆர் ரஹ்மான் சாரின் அழகான இசை” எனப் படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.

மாமன்னன் படத்தில் தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் நடக்கும் அரசியல் களத்தை மாரி செல்வராஜ் படமாக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்