மாமன்னன் படத்தின் முன்பதிவு தொடங்கியது..!

திங்கள், 26 ஜூன் 2023 (08:28 IST)
மாமன்னன் திரைப்படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.  மாரி செல்வராஜ் கர்ணன் படத்துக்குப் பிறகு இயக்கியுள்ளார். படம் ஜூன் மாதம்  29 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் படத்தின் ப்ரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

இந்நிலையில் இப்போது மாமன்னன் திரைப்படத்தின் முன்பதிவு தொடங்கியுள்ளது. நேற்று முதல் இணையத்தில் மாமன்னன் படத்துக்கு முன்பதிவு தொடங்கிய நிலையில், ரசிகர்கள் ஆர்வமாக முன்பதிவுகளை செய்து வருகின்றனர்.

சமீபத்தில் ரிலீஸான மாமன்னன் திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் ஆகியவை படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளன. மேலும் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் முன்பு தேவர் மகன் படம் பற்றி மாரி செல்வராஜ் பேசியது சமூகவலைதளங்களில் விவாதங்களை உருவாக்கியுள்ளது. இதுவும் படத்துக்கு கூடுதல் ஹைப்பை ஏற்றியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்