ரஜினியின் அரசியல் கட்சியில் தனுஷூக்கு என்ன பதவி?

Webdunia
வியாழன், 25 மே 2017 (04:30 IST)
கடந்த வாரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்த போது அரசியல் வருகை குறித்து ஒருசில வார்த்தைகள் பேசினார். ஆனால் அந்த பேச்சு தமிழகத்தை மட்டுமின்றி இந்தியாவையே பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கிவிட்டது. ரஜினி அரசியலுக்கு வரட்டும் என்றும், அவர் வரக்கூடாது என்றும் தேசிய தலைவர்கள் முதல் உள்ளூர் தலைவர்கள் வரை கருத்துக்களை கூறி வருகின்றனர். திரையுலகை சேர்ந்த பலரும் இதுகுறித்து தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.



 


இந்த நிலையில் நடிகரும், ரஜினியின் மருமகனுமான தனுஷ் இதுவரை இதுகுறித்து எந்தவித கருத்துக்களையும் கூறாமல் இருந்தார். ஆனால் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் செய்தியாளர்களின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த தனுஷ் கூறியதாவது:  'ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்த பேச்சுகளால் எங்களது குடும்பத்திற்கு எந்த அழுத்தமும் இல்லை. அரசியல் பற்றிய முடிவு மட்டுமல்ல எந்த முடிவாக இருந்தாலும் ரஜினிகாந்த் எடுத்தால் அது சரியாகத் தான் இருக்கும்' என்று தெரிவித்தார்.

ரஜினியின் அரசியல் கட்சியில் தனுஷூக்கு பொறுப்பு கிடைக்குமா? என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்காமல் புன்னகையை மட்டுமே பதிலாக உதிர்த்துவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டார்.

 
அடுத்த கட்டுரையில்