தனுஷ் இயக்கத்தில் உருவான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படம் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அஜித் நடிப்பில் உருவான விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாகும் என்று நேற்று ட்ரெய்லருடன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட தனுஷின் நிலவுக்கு என் மேல் என்னடி திரைப்படம் பிப்ரவரி 21 ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் விரைவில் ட்ரெய்லர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷ் இதுவரை இரண்டு படங்களை இயக்கி உள்ள நிலையில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் அவரது இயக்கத்தில் உருவாகும் மூன்றாவது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அவரது சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் அனிகா சுரேந்திரன், ப்ரியா பிரகாஷ் வாரியர், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தனுஷ் மற்றும் பிரியங்கா மோகன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.