ஒருவழியாக முடிந்தது கவினின் ‘கிஸ்’ படத்தின் ஷூட்டிங்!

vinoth

சனி, 18 ஜனவரி 2025 (14:49 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கவனம் ஈர்த்தவர் சீரியல் நடிகர் கவின். அதன் பின்னர் பெரியத்திரையில் கவனம் செலுத்திய அவர் லிப்ட், டாடா மற்றும் ஸ்டார் ஆகிய படங்களின் மூலம் நம்பிக்கைக்குரிய இளம் நடிகராக உருவானார். இதையடுத்து அவர் நடித்த பிளடி பெக்கர் என்ற படம் ரிலீஸாகி படுதோல்வி அடைந்தது.

இந்நிலையில் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், நடன இயக்குனர் சதீஷ் இயக்குனராக அறிமுகமாகும் முதல் படத்தில் கவின் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் பெரும்பகுதி முடிந்துள்ள நிலையில் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் உரிய நேரத்தில் பாடல்கள் கொடுக்காததால் தாமதமாகி வந்தது. அதனால் அவர் அந்த படத்தில் இருந்து விலக, தற்போது ஜென் மார்ட்டின் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்நிலையில் நீண்ட நாட்களாக நடந்து வந்த இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. விரைவில் படத்தின் அடுத்தகட்ட அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்