இயக்குனர் ஷங்கர் எழுத்தாளரும், மக்களவை உறுப்பினருமான சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலைப் படமாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. பாகுபலி மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்று படங்களின் வெற்றியை அடுத்து மறுபடியும் ஒரு வரலாற்று புனைவு திரைப்படம் உருவாக உள்ளது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கிடையில் ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 மற்றும் கேம்சேஞ்சர் ஆகிய படங்கள் மோசமான விமர்சனங்களைப் பெற்று ஷங்கருக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் சினிமா தயாரிப்பாளரும் சினிமா பத்திரிக்கையாளருமான அந்தணன் ஒரு நேர்காணலில் பேசும்போது “வேள்பாரி திரைப்படம் வரவே வாய்ப்பில்லை. ஏனென்றால் இப்போதிருக்கும் நிலையில் ஷங்கரை நம்பி அவ்வளவு பணம் யாரும் முதலீடு செய்ய மாட்டார்கள்.” எனக் கூறியுள்ளார். ஆனால் தன்னுடைய அடுத்த படம் வேள்பாரிதான் என்று ஷங்கர் கூறியுள்லார் என்பது குறிப்பிடத்தக்கது.