வியாபாரத்தைத் தொடங்கிய தனுஷின் ‘இட்லி கடை’ படத் தயாரிப்பாளர்… வெளிநாட்டு உரிமை இத்தனைக் கோடியா?

vinoth

புதன், 8 ஜனவரி 2025 (11:21 IST)
பவர் பாண்டி மற்றும் ராயன் ஆகிய படங்களை இயக்கிய தனுஷ் அடுத்து புதுமுகங்களை வைத்து ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து   தனுஷ் மீண்டும் இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தேனி உள்ளிட்ட தனுஷின் சொந்த ஊர்ப் பகுதிகளில் தொடங்கி நடந்தது.

இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், நித்யா மேனன் மற்றும் அருண் விஜய் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். படத்தின் பெரும்பாலானக் காட்சிகள் தேனி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடந்தது. அடுத்த கட்ட ஷூட்டிங் பாங்காங்கில் ஜனவரி இறுதியில் தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. படம் ஏப்ரல் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தின் வியாபாரத்தை அதற்குள்ளாகவே தயாரிப்பு நிறுவனம் தொடங்கி விட்டதாக சொல்லப்படுகிறது. வெளிநாட்டு விநியோக உரிமையை சுமார் 12.5 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவரை தனுஷ் படத்துக்கு இவ்வளவு பெரியத் தொகை கொடுக்கப்பட்டதில்லை என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்