தனுஷ் மற்றும் நாகார்ஜுனா இணைந்து நடித்த 'குபேரா' திரைப்படம் கடந்த வெள்ளிக் கிழமை பேன் இந்தியா படமாக ரிலீஸானது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்க சுனில் நாரங் தயாரித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் தனுஷ் இருந்தும் இதை ஒரு தெலுங்கு படமாகவே ரசிகர்கள் பார்த்ததால் தமிழ் நாட்டில் மிகப்பெரிய ஓபனிங் இந்த படத்துக்குக் கிடைக்கவில்லை.
5 நாளில் மொத்தமாக 54 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இதில் தமிழில் இருந்து சுமார் 15 கோடி ரூபாயும், தெலுங்கில் இருந்து 40 கோடி ரூபாய்க்கு மேலும் வசூலாகியுள்ளது. இதனால் இந்த படம் 100 கோடி ரூபாய் வசூலைத் தொடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.