புரமோஷனில் கலந்துகொள்ளாமல் சர்ச்சையில் சிக்கிய தனுஷ் பட நடிகை

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (14:12 IST)
மலையாள சினிமாவில் பிரேமம் படத்தில் அறிமுகம் ஆனவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் ஒரு புதிய பட புரோமோஷனில் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

தமிழில், தனுஷ் நடிப்பில் வெளியான கொடி, தள்ளிப்போகாதே உள்ளிட்ட படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் அனுபமா பரமேஸ்வரன்.

இவர் தற்போது தெலுங்கில் கார்த்த்கேயா பேஜஸ், பட்டர்பிளை உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

இதில், நிகில் சித்தார்த்தின் ஜோடியாக அனுபமா நடித்துள்ள படம் கார்த்திகேயா2 இப்படம் வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி ரிலீஸாகிறது. இப்படத்தின் புரமோஷனினல், சித்தார் கலந்துகொண்டு வருகிறார். ஆனால் அவருக்கு ஜோடியாக நடித்த அனுபமா கலந்துகொள்ளவில்லை.

இதனால் படக்குழு அவர் மீது அதிருப்தி அடைந்துள்ளது. இதுகுறித்து அனுபமா ஒரு விளக்கம் அளித்துள்ளார். அதில், கார்த்திகேயா 2 பட வெளியீட்டு தேதிகள் பல முறை மாற்றப்பட்டதால், என் கால்ஷூட்டை மற்ற படங்களுக்கு கொடுத்துவிட்டேன். அதனால், இரு படங்களில் இரவு பகலாக நடித்துவருவதால், என்னால் புரமோஷனில் கலந்துகொள்ள முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்