இரவின் நிழல் படக்குழுவினரை பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (14:07 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் பார்த்திபன் நடித்து இயக்கிய பட இரவின் நிழல். இப்படத்தை முதல்வர் ஸ்டாலின் பார்த்துப் பாராட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவில் இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றி பின், புதிய பாதை மூலம் இயக்குனர் மற்றும் நடிகராக அறிமுகம் ஆனவர் பார்த்திபன்.

இவர் பல படங்களை இயக்கிய போதிலும், கடந்தாண்டு வெளியான ஒத்தை செருப்பு படம் தேசியவிருது வென்றதுடன், ஆஸ்கருக்கும் சென்றது.

இந்த நிலையில், சமீபத்தில் இவர், இயக்கி, நடித்த இரவின் நிழல்படம் தமிழகத்தின் முதல் நான் லீனியர் படம் என்ற பெருமையுடன், வரவேற்பைப் பெற்றுள்ளது.

சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட  பலரும் இப்படத்தைப் பாராட்டி வரும் நிலையில், இப்படத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் பார்த்து பாராட்டியுள்ளார்.

இப்படம் குறித்து முதல்வர் ஸ்டாலின் பாராட்டியுள்ளதாவது: இரவின் நிழல் படத்தைப்பற்றி ஓரேவார்த்தையில் சொல்வதெனில் இப்படம் அற்புதம் என்று ஒட்டுமொத்தப் படக்குழுவினர் மற்றும் இயக்குனர் பார்த்திபனையும் பாராட்டினார்.

இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இப்படம் தமிழக அரசின்
விருது மட்டுமின்றி தேசிய விருதையும் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்