தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’: ‘தாய்க்கிழவி’ பாடல் ரிலீஸ்

Webdunia
வெள்ளி, 24 ஜூன் 2022 (18:26 IST)
தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படம் வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் இன்று மாலை இந்த படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் ஆக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது 
 
இதனை அடுத்து சற்று முன் இந்த பாடல் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அனிருத் கம்போஸ் செய்த இந்த பாடலை தனுஷ் எழுதி பாடியுள்ளார் என்பதும் இந்த பாடல் அசத்தலாக உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் மற்றும் ராஷிகண்ணா ஆகிய மூவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் பிரகாஷ்ராஜ் உள்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்