வெற்றிமாறன் தயாரிப்பில் ஆண்ட்ரியா … சந்தோஷ் நாராயணன் இசிஅயில் முதல் சிங்கிள் அப்டேட்

வியாழன், 23 ஜூன் 2022 (09:42 IST)
ஆண்ட்ரியா நடிக்கும் அனல் மேலே பனித்துளி படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியீடு குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’அனல் மேலே பனித்துளி’. இந்த படம் நேரடியாக சோனி லைவ் ஓடிடி நிறுவனத்திற்காக தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த படத்தை கெய்சர் ஆனந்த் என்பவர் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடவே கவனம் பெற்றது.

இந்நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் ஜூன் 24 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்