தனுஷின் ‘நானே வருவேன்’ ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (12:19 IST)
தனுஷ் நடித்த 'வாத்தி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி நேற்று வெளியான நிலையில் இன்று அவர் நடித்த நானே வருவேன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவான திரைப்படம் நானே வருவேன். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. 
 
இந்த நிலையில் நானே வருவேன் திரைப்படம் வரும் 29ஆம் தேதி ரிலீசாகும் என இந்த படத்தின் தயாரிப்பாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
 
தனுஷ் இரண்டு வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பது இந்த படத்தில் இரண்டு நாயகிகள் நடித்துள்ளனர் என்பதும் அவர்கள் எல்லி அவ்ரம், இந்துஜா ரவிச்சந்திரன் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்