பிரபல ஓடிடியில் தனுஷின் திருச்சிற்றம்பலம் ரிலீஸ்… தேதி அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (09:04 IST)
தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் எதிர்பாராத அளவுக்கு வெற்றியைப் பெற்றது.

தனுஷ் நடிப்பில் அனிருத் இசையில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி ரிலீஸான திரைப்படம் திருச்சிற்றம்பலம். இந்த படத்துக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்த படங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது என சொல்லப்படுகிறது. இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸின் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்