தனுஷின் 'மாரி 2' அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 4 டிசம்பர் 2018 (11:15 IST)
வரும் கிறிஸ்துமஸ் திருநாளில் ஜெயம் ரவியின் 'அடங்க மறு', 'விஜய்சேதுபதியின் 'சீதக்காதி' ஆகிய படங்கள் ரிலீஸ் என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தனுஷின் 'மாரி 2' மற்றும் சிவகார்த்திகேயனின் 'கனா' ஆகிய படங்களின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் சில நிமிடங்களுக்கு முன் தனுஷின் 'மாரி 2' திரைப்படம் டிசம்பர் 21 ரிலீஸ் என அவருடைய டுவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த படத்தின் டிரைலர் டிசம்பர் 5ஆம் தேதி வெளிவரும் என்ற தகவலும் அதில் உள்ளது.

எனவே வரும் கிறிஸ்துமஸ் விடுமுறையில் 'சீதக்காதி', அடங்கமறு, மாரி 2 ஆகிய மூன்று படங்கள் உறுதி செய்யப்பட்டுவிட்டது. சிவகார்த்திகேயனின் 'கனா' ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் நான்குமுனை போட்டி உறுதி என்றே தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்