சமீபத்தில் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்த திமுக பொருளாளர் துரைமுருகன், காங்கிரஸ், மதிமுக, விடுதலைச்சிறுத்தைகள் உள்பட எந்த கட்சியும் திமுகவுடன் இப்போதைக்கு தேர்தல் கூட்டணியில் இல்லை என்றும் தேர்தல் அறிவிப்புக்கு பின் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தைக்கு பின்னரே திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் உள்ளது என்பது உறுதியாகும் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வைகோ துரைமுருகனின் பேட்டியை பார்த்தேன். இது என்னையும் காங்கிரஸ், மதிமுக, விடுதலைச்சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை வருத்தமடைய செய்துள்ளது என்றார்.