தான் பெரிதும் நம்பிய கங்குவா படம் சொதப்பியதால் இப்போது சூர்யா குறுகிய கால படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். ஏற்கனவே கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் ரெட்ரோ படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்தில் நடித்து வருகிறார். இதன் பின்னர் உடனடியாக அமல் நீரத் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து சமீபத்தைய சூப்பர் ஹிட் படமான லக்கி பாஸ்கர் படத்தின் இயக்குனர் வெங்கட் அட்லூரி இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நடிக்க பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. இந்த படம் மாருதி காரின் 769 cc எஞ்சின் உருவாக்கம் பற்றியதாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தை லக்கி பாஸ்கர் படத்தை தயாரித்த சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்கும் என சொல்லப்படுகிறது.