50 கோடி ரூபாய் வசூலைக் கடந்த விஷால்- சுந்தர் சி யின் ‘மத கஜ ராஜா’!

vinoth

வெள்ளி, 24 ஜனவரி 2025 (18:09 IST)
விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாட்ரிப்பில் உருவாகி 12 ஆண்டுகளாக ரிலிஸாகாமல் இருந்த மத கஜ ராஜா கடந்த ஜனவரி 12 ஆம் தேதி ரிலீசானது. விஷால் மற்றும் சுந்தர் சி கூட்டணி முதல் முறையாக சேர்ந்த திரைப்படத்தில் அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், சந்தானம், மணிவண்ணன் மற்றும் மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்த படம் ரசிகர்களை எதிர்பார்ப்பிற்கு மாறாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. பொங்கல் போன்ற ஒரு பண்டிகைக்கு ஏற்ற கலகலப்பான படமாக மத கஜ ராஜா உள்ளதாக விமர்சனங்கள் பரவ பொங்கலுக்கு ரிலீஸான அனைத்துப் படங்களிலும் அதிக வசூல் செய்த படமாக மத கஜ ராஜா முதலிடம் பிடித்தது.

இந்நிலையில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த படம் 50 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளது. இதனால் தொடர் தோல்விகளாலும் உடல்நலப் பிரச்சனைகளாலும் அவதிப்பட்டு வந்த விஷாலுக்கு உத்வேகமான ஒரு சூழல் அமைந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்