விஜய்யின் ‘தளபதி 69’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Mahendran

வெள்ளி, 24 ஜனவரி 2025 (17:45 IST)
தளபதி விஜய் நடித்துவரும் கடைசி திரைப்படமான தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னால் தொடங்கிய நிலையில் தற்போது விறுவிறுப்பாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் பேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
 
தளபதி 69 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகும் என்று இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரடக்சன் சார்பில் அறிவிக்கப்பட்டு, இது குறித்த வீடியோவையும் இந்நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
 
மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு 69% முடிந்து விட்டதாகவும் விரைவில் ஒட்டுமொத்த படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது. விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வரும்  இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், கௌதம் மேனன், பாபி தியோல்,  நரேன், பிரியாமணி, மமிதா பாஜு உள்ளிட்ட பல நடித்துள்ளனர்.
 
அனிருத் ஒசையில் உருவாகும் இந்த படம் மிகவும் பிரமாண்டமாக பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது என்பதும் இந்த படத்தை எச் வினோத் இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் ஒரு சிலர் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் தான் வரும் என்று கூறி வருகின்றனர்.
 
Edited by Mahendran
 

Update oda vandhurkom ????
69% completed ███░░#Thalapathy69FirstLookOnJan26 ????#Thalapathy @actorvijay sir #HVinoth @thedeol @prakashraaj @menongautham #Priyamani @itsNarain @hegdepooja @_mamithabaiju @anirudhofficial @Jagadishbliss @LohithNK01 @sathyaDP @ActionAnlarasupic.twitter.com/FA2MbAjdAY

— KVN Productions (@KvnProductions) January 24, 2025

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்