இதையடுத்து ராம்சரண், தற்போது உப்பென்னா படத்தின் இயக்குனர் புச்சிபாபு சனா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தற்போது RC16 என அழைத்து வருகின்றனர். இந்த படத்தில் கதாநாயகியாக ஜான்வி கபூர் இணைந்துள்ளார். இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்நிலையில் திடீரென்று இந்த படத்தில் இருந்து ஏ ஆர் ரஹ்மான் விலகிவிட்டதாக தகவல்கள் பரவின. சமீபத்தில் சூர்யா 45 படத்தில் இருந்தும் ரஹ்மான் விலகினார். அதனால் இந்த தகவலும் உண்மையாக இருக்குமோ என ரசிகர்களால் நம்பப்பட்டது. ஆனால் இந்த தகவலை மறுத்துள்ளது தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ். பரவி வரும் தகவல் வெறும் வதந்திதான் என மறுத்துள்ளது.