ஆயிரத்தில் ஒருவன் படத்துக்குப் பிறகு… கேப்டன் மில்லர் குறித்து ஜி வி பிரகாஷ் கொடுத்த அப்டேட்!

Webdunia
புதன், 29 மார்ச் 2023 (14:23 IST)
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான ராக்கி கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி பொதுவாக நல்ல விமர்சனங்களையே பெற்றது. இதையடுத்து அவர் செல்வராகவனை வைத்து இயக்கிய திரைப்படமும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் அவர் தனது மூன்றாவது படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.  இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார்.  இப்போது முக்கியமானக் காட்சிகளை தென்காசி அருகே படக்குழு படமாக்கி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தற்போது தென்காசிக்கு அருகே மிகப்பிரம்மாண்டமாக ஆக்‌ஷன் காட்சிகளைப் படக்குழுவினர் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் படத்தின் பிஜிஎம் பற்றி ஒரு அப்டேட்டை வெளியிட அது வைரல் ஆகி வருகிறது.

அதில் “ஆயிரத்தில் ஒருவன் ‘the celebration of life’ இசைக்கு பிறகு படமாக்கப்பட்ட காட்சிகளுக்கு இசையமைக்கிறேன். செம்மயான பின்னணி இசை வந்து கொண்டிருக்கிறது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்