அடுத்த கட்டத்தை எட்டிய தனுஷ் & செல்வராகவன் கூட்டணி!

Webdunia
செவ்வாய், 5 ஜனவரி 2021 (16:40 IST)
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்திற்கான ஸ்டில்ஸ் ஷூட் இன்று நடக்க உள்ளது.

நடிகர் தனுஷும் செல்வராகவனும் தமிழ் சினிமாவின் ஹிட் காம்போ. அவர்கள் இருவரும் கடைசியாக மயக்கம் என்ன படத்தில் இணைந்து பணியாற்றினர். அதன் பிறகு  8 ஆண்டுகளுக்குப் பிறகு தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளார் தனுஷ். இந்த 8 ஆண்டுகாலத்தில் செல்வராகவன் இயக்கிய எந்த படமும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது தனது கர்ணன் மற்றும் அத்ராங்கி ரே ஆகிய படங்களை முடித்துள்ள தனுஷ் மார்ச் மாதத்தில் செல்வராகவன் படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது. இதை தயாரிப்பு நிறுவனமான வி கிரியேஷன்ஸ் இன்று அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.

இதையடுத்து இந்த படத்துக்கான ஸ்டில்ஸ் ஷூட்டை  இன்று நடத்தி முடித்துள்ளார் செல்வராகவன். இதில் தனுஷும் கலந்துகொண்டாராம். இந்த படத்துக்கு தற்காலிகமாக எஸ் 12 என தலைப்பு வைத்துள்ளார்களாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்