கதாநாயகனுக்கு இணையாக சம்பளம் கேட்ட நடிகை… வாய்ப்பு போன சோகம்!

Webdunia
திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (11:01 IST)
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் புதிய படத்தில் நடிக்க தீபிகா படுகோன் ஒப்பந்தமான நிலையில் இப்போது நீக்கப்பட்டுள்ளார்.

பாலிவுட்டின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சஞ்சய் லீலா பன்சாலி இப்போது பைஜு பாவ்ரா என்ற படத்தை இயக்க உள்ளார். இந்த படத்துக்காக அவரின் முந்தைய படங்களான பத்மாவதி, பாஜிராவ் மஸ்தானி, ராம்லீலா ஆகிய மூன்று படங்களிலுமே ரன்வீர்-தீபிகா ஜோடி இடம் பெற்றிருந்ததால் அதே ஜோடியை கேட்டுள்ளார்.

இதற்கு முதலில் ஒப்புக்கொண்ட தீபிகா படுகோன், தனது கணவர் ரண்வீர் சிங்குக்கு இணையாக சம்பளம் கேட்டதால் அவரை நீக்கிவிட்டு இப்போது வேறொரு கதாநாயகியை தேடியுள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்