பைரவா கடும் நஷ்டம்: பிரபல விமர்சகர் குமுறல்!!

Webdunia
புதன், 26 ஏப்ரல் 2017 (14:31 IST)
விஜய் நடிப்பில் பைரவா படம் கடந்த பொங்கலுக்கு வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.


 
 
இந்நிலையில் சினிமாவின் பிரபல விமர்சகர் பைரவா படத்தின் நஷ்டம் குறித்து பேசியுள்ளார்.
 
அவர் கூறுகையில் தமிழகத்தை பொறுத்தவரை அது ரஜினி படமாகவே இருந்தாலும் ரூ.48 கோடிக்கு மேல் வியாபாரம் நடக்காது. ஆனால், பைரவா விஜய்யின் மார்க்கெட் தாண்டி ரூ.47 கோடிக்கு விற்கப்பட்டது.
 
முதல் வாரம் நல்ல வசூல் இருந்தாலும் அடுத்த வாரம் 30% வசூல் கூட வரவில்லை என கூறியுள்ளார்.
 
மேலும், பைரவா படத்தில் ஒரு ரூபாய் கூட கருப்பு பணம் இல்லை, விஜயா நிறுவனம் தன் சொந்த பணத்திலேயே படத்தை எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்