ராமாயணம் படத்தில் இணைந்த யாஷ்.. முக்கியக் காட்சிகள் படமாக்கம்!

vinoth

புதன், 26 பிப்ரவரி 2025 (09:09 IST)
பாலிவுட் இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் மூன்று பாகங்களாக உருவாகும் ராமாயணம் சம்மந்தப்பட்ட படத்தில் ராமன் வேடத்தில் ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும்  ராவணன் வேடத்தில் கேஜிஎஃப் புகழ் யாஷும் நடிக்க, அனுமன் வேடத்தில் சன்னி தியோலும், சூர்ப்பனகை வேடத்தில் ரகுல் ப்ரீத் சிங்கும், கைகேயியாக லாரா தத்தாவும் நடிக்கின்றனர்.

இந்த படத்தை நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டுடியோஸ் மற்றும் யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன.  இந்த படத்தில் ராவணன் வேடத்தில் நடிக்க யாஷ் 200 கோடி ரூபாய் ஊதியமாகப் பெறவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்திய அளவில் ஒரு படத்தில் வில்லனாக நடிக்க ஒரு நடிகர் வாங்கும் அதிகபட்ச சம்பளம் இதுவாகதான் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ஷூட்டிங்கில் யாஷ் கலந்துகொண்டுள்ளார். அவர் சம்மந்தமானக் காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே முதல் பாகத்துக்கான ரன்பீர் மற்றும் சாயபல்லவி ஆகியோரின் காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்