அது மட்டும் நடந்தால் நான் மன அழுத்தத்துக்குள் சென்றுவிடுவேன்… அமீர்கான் ஓபன் டாக்!

vinoth

புதன், 26 பிப்ரவரி 2025 (09:04 IST)
சில ஆண்டுகளுக்கு முன்னர் அமீர்கான் நடிப்பில் லால் சிங் சத்தா என்ற திரைப்படம் வெளியாகி படுதோல்வி அடைந்தது. படம் சுமாராக இருந்தாலும், பாலிவுட்டில் அந்த படத்துக்கு எதிராக பரப்பப் பட்ட வெறுப்புப் பிரச்சாரமும் தோல்விக்குக் காரணமாக அமைந்தது.

இந்த படம் 30 ஆண்டுகளுக்கு முன்னர் ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்ஸ் நடிப்பில் வெளியான ‘பாரஸ்ட் ஹம்ப்’ என்ற படத்தின் ரீமேக் ஆகும். இந்த படம் ஆஸ்கர் உள்ளிட்ட விருதுகளைப் பெற்று மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. ஆனால் இந்தியில் அந்த படம் படுதோல்வி அடைந்தது வியப்பை அளித்தது. இந்த படத்தில் தன்னுடைய நடிப்பு சரியாக இல்லை என்பதால்தான் படம் ஹிட்டாகவில்லை என்று அமீர்கானே ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் படத்தோல்வி குறித்து தற்போது பேசியுள்ள அவர் “என்னுடைய படங்கள் தோல்வி அடைந்தால் நான் 2 முதல் 3 வாரங்களுக்கு மன அழுத்தத்துக்குள் சென்றுவிடுவேன். ஏனென்றால் ஒரு படத்தை உருவாக்குவது என்பது கடினமானது.  அதன் பின்னர் நான் என் குழுவினருடன் அமர்ந்து என்ன தவறு நடந்தது என்பதை விவாதித்து தெரிந்து கொள்வேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்