மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துங்கள்… ஜெயம் ரவி & ஆர்த்திக்கு நீதிமன்றம் உத்தரவு!

vinoth
ஞாயிறு, 22 டிசம்பர் 2024 (13:57 IST)
ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, ஜெயம் ரவி விவாகரத்துக்கு கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஜெயம் ரவி , ஆர்த்தி திருமணம் கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி தனது மனைவியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்தார்.

ஆனால், இந்த விவகாரம் குறித்து தன்னிடம் ஆலோசனை செய்யாமல், ஜெயம் ரவி தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளார் என்று ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வரும் நிலையில் வழக்கு விசாரணையின் போது இருவருக்கும் சமரசப் பேச்சுவார்த்தை நடத்த நியமிக்கப்பட்ட மத்தியஸ்தர் ‘இன்னும் சமரசப் பேச்சுவார்த்தை முடியவில்லை’ எனத் தெரிவித்துள்ளார். இதனால் மீண்டும் இருவரையும் சமரச மையத்தில் மீண்டும் மனம் விட்டுப் பேசுமாறு ரவி மற்றும் ஆர்த்தியை அறிவுறுத்தியுள்ளார். இதனால் வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதனால் இருவரும் பிரச்சனையை மறந்து மீண்டும் இணைவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்