காதலிக்க நேரமில்லை செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்!

vinoth

செவ்வாய், 17 டிசம்பர் 2024 (15:33 IST)
ஜெயம் ரவியின் 33 வது திரைப்படமான ‘காதலிக்க நேரமில்லை’ படத்தைக் கிருத்திகா உதயநிதி இயக்கிமுடித்துள்ளார். ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் முக்கிய கேரக்டரில் நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, மனோ,  லட்சுமி ராமகிருஷ்ணன், ஜான் கொக்கன், வினோதினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏஆர் ரஹ்மான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில் படத்தின் ஆடியோ உரிமையை டி சீரிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘என்னை இழுக்காதடி’ வெளியாகி மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

இதையடுத்து இரண்டாவது பாடலான ‘லாவண்டர் நேரமே’ நாளை மாலை 5 மணிக்கு ரிலீஸாகும் என ஜெயம் ரவி தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் அறிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்