விஜய்-65 படத்தில் ’குக் வித் கோமாளி ’புகழ் ??

Webdunia
திங்கள், 8 பிப்ரவரி 2021 (23:19 IST)
மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு இப்போது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் விஜய் -65 படமாகும். இப்படத்தில் குக் வித் கோமாளி புகழ் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் படத்தை இயக்கியுள்ள நெல்சன்  அடுத்து விஜய் -65 படத்தை இயக்கவுள்ளார்.

இப்படத்திற்கான கதாநாயகிகள் தேர்வு மற்றும் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு எல்லாம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. யோகி பாபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் சில சேஸிங் காட்சிகள் மட்டும் வெளிநாடுகளிலும் எடுக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. படப்பிடிப்பை ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு மேல் நெல்சன் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பலரும் சினிமாவில் வாய்ப்புப் பெற்று வரும் நிலையில், விஜய் -65 படத்தில் குக் வித் கோமாளி புகழ் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

ஏற்கனவே புகழ் சந்தானம் நடிக்கவுள்ள ஒரு படத்திலும், அருண்விஜய்யின் -33 படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்