கோப்ரா படத்தின் ரன்னிங் டைம் 03:03:03! – காரணம் என்ன தெரியுமா?

Webdunia
ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2022 (15:09 IST)
விக்ரம் நடித்து வெளியாகவுள்ள கோப்ரா படத்தின் மொத்த ரன்னிங் டைம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் “கோப்ரா”. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் ஆகஸ்டு 31ம் தேதியன்று ரிலீஸாக உள்ள நிலையில் பட ப்ரொமோஷன் வேலைகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்திற்கு தணிக்கைக்குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

மேலும் படத்தின் மொத்த ரன்னிங் டைம் 3 மணி நேரம் 3 நிமிடங்கள் மற்றும் 3 நொடிகள் என மொத்தமாக 03:03:03 என்ற விகிதத்தில் அமைந்துள்ளது. இது ஏதும் நியூமராலஜியா அல்லது அஜய் ஞானமுத்து தனது மூன்றாவது படம் இது என்பதால் இப்படி 3 வரும்படி செய்திருக்கிறாரா என்ற பேச்சுகள் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்