கோப்ரா சென்சார் சான்றிதழில் மாற்றமா? பின்னணி என்ன?

சனி, 27 ஆகஸ்ட் 2022 (15:42 IST)
விக்ரம் திரைப்படத்தின் சென்சார் சான்றிதழ் மாற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விக்ரம் நடித்த ‘கோப்ரா’  திரைப்படம் வரும் 31-ஆம் தேதி ரிலீஸாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள் வெளியாகி உள்ளன. ‘கோப்ரா’ படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்தப் படத்திற்கு யூஏ சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 55 நிமிடங்கள் என உள்ளன.

கடந்த சில மாதங்களாக இவ்வளவு நீளம் உள்ள படங்கள் ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இதனால் கோப்ரா தயாரிப்பாளர் லலித் நீளத்தைக் குறைக்க சொல்லி இயக்குனர் அஜய் ஞானமுத்துவிடம் வலியுறுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் இயக்குனர் அதற்கு சம்மதிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் தற்போது படத்தின் சென்சார் சான்றிதழ் ஏ சான்றிதழாக மாற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்