“ஒத்த செருப்புக்குப் பிறகு ஒத்த ஷாட் படம்!” இரவின் நிழல் படத்தைப் பாராட்டிய முதல்வர்

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (10:17 IST)
பார்த்திபன் இயக்கி நடித்துள்ள இரவின் நிழல் திரைப்படம் கடந்த ஜூலை 15 ஆம் தேதி வெளியானது.

இயக்குனர் பார்த்திபன் இரவின் நிழல் என்ற திரைப்படத்தை எடுத்துள்ளார். இந்த படம் மொத்தமும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ள உலகின் முதல் நான் லீனியர் திரைப்படம் என்றும் விளம்பரப்படுத்தப் பட்டு வருகிறது. இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் கடந்த ஜூலை 15 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பார்த்துள்ளார். படத்தைப் பார்த்தபின்னர் “எதிலும் தனிப்பாணி - அதுதான் இரா. பார்த்திபன்.. ஒத்த செருப்புக்குப் பிறகு ஒத்த ஷாட் படம்! இரவின் நிழல் படத்தின் தொழில்நுட்பத் திறன், தமிழ்த் திரையுலகின் தொழில்நுட்பத் திறனின் உயரம்! Nonlinear single shot படத்தின் மூலம் தான் ஒரு டெக்னாலஜி சீனியர் என காட்டியுள்ள அவருக்கு வாழ்த்துகள்!” என பாராட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்