”இரவின் நிழல்” பிரமாதமா இருந்துச்சு..! – பார்த்திபனை அழைத்து பாராட்டிய ரஜினி!

வியாழன், 21 ஜூலை 2022 (15:06 IST)
தமிழ் இயக்குனர் பார்த்திபன் இயக்கி வெளியான இரவின் நிழல் படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் பார்த்திபனை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

வித்யாசமான கதைக் களன்களோடு திரைப்படம் எடுப்பதில் இயக்குனர், நடிகர் பார்த்திபன் எப்போதுமே தனித்துவமானவர். சமீபத்தில் அவர் உருவாக்கிய ஒத்த செருப்பு ஒரே ஒரு நடிகரை வைத்து மட்டுமே எடுக்கப்பட்ட வித்தியாசமான முயற்சியாக அமைந்தது.

அதை தொடர்ந்து தற்போது பார்த்திபனே இயக்கி, நடித்து வெளியாகியுள்ள படம் “இரவின் நிழல்”. ஒரே ஷாட்டில் நான் லீனியராக எடுக்கப்பட்டுள்ள இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பலரும் பார்த்திபனின் இந்த புதிய முயற்சியை பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இரவின் நிழல் படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் பார்த்திபனை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்