விக்ரம்மின் சீயான் 62 படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்!

vinoth
திங்கள், 4 மார்ச் 2024 (07:38 IST)
தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக தனது நடிப்புத் திறனால் ரசிகர்களைக் கவர்ந்து வருபவர் விக்ரம். யாராலும் நடிக்க முடியாத பல கடினமான கதாப்பாத்திரங்களை கூட எடுத்து செய்யும் இவரின் ஆர்வத்திற்கு அந்நியன், பிதாமகன், சேது போன்ற படங்கள் நல்ல தீனியாய் அமைந்தன.

பின்னர் பல கெட்டப்புகளில் விக்ரம் பல படங்களில் நடித்திருந்தாலும் அந்த படங்கள் அவ்வளவாக பேசப்படவில்லை.  கடைசியாய் அவர் நடித்த்ருந்த கோப்ரா உள்ளிட்ட படங்கள் தோல்வியை தழுவின. இந்நிலையில் தற்போது பா.ரஞ்சித் உடன் விக்ரம் இணைந்துள்ள தங்கலான் படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கடுத்து விக்ரம், இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் ஏற்கனவே வில்லனாக நடிக்க எஸ் ஜே சூர்யா ஒப்பந்தமாகியுள்ள நிலையில், இன்னும் இரண்டு வில்லன்கள் இருப்பதாக சொல்லப்பட்டது . இந்நிலையில் இப்போது இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சராமூடு நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமான அறிவிப்பை படத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்