7 கோடி ரூபாய் டெபாசிட்… அனைத்து ஆவணங்களும் தாக்கல் செய்ய வேண்டும் - வீர தீர சூரன் தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் ஆணை!

vinoth

வியாழன், 27 மார்ச் 2025 (11:24 IST)
விக்ரம் நடிப்பில் இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படம் இன்று ரிலீஸ் ஆக இருந்தது. இந்த படத்தில் மற்ற முக்கிய வேடங்களில் எஸ் ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் துஷாரா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தைக் கேரளாவைச் சேர்ந்த தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான ஷிபு தமீம்ஸ் தயாரித்துள்ளார். இவர் ஏற்கனவே விக்ரம்மை வைத்து ‘இருமுகன்’ மற்றும் ‘சாமி2’ ஆகிய படங்களைத் தயாரித்து அதில் பெரிய நஷ்டத்தை சந்தித்தவர். இந்நிலையில் தற்போது வீர தீர சூரன் படத்தில் முதலீடு செய்திருந்த IVY என்ற நிறுவனத்துக்கு அவர் டிஜிட்டல் உரிமையைக் கொடுத்துள்ளார்.

ஆனால் அந்நிறுவனம் டிஜிட்டல் உரிமையை விற்பனை செய்வதற்குள்ளாகவே ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர் அறிவித்துவிட்டதாகவும் அதனால் தங்களால் டிஜிட்டல் உரிமையை விற்பனை செய்ய முடியவில்லை என்றும் அந்நிறுவனம் டெல்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இன்று காலை 10.30 மணி வரை படத்தை ரிலீஸ் செய்ய இடைக்காலத் தடை விதித்துள்ளது. அதனால் இன்று திரையிட இருந்த முதல் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் தற்போது விசாரணை நடந்த நிலையில் IVY நிறுவனம் படத்துக்கு நிதியுதவி செய்துள்ளதால் தங்களிடம்தான் படத்தின் உரிமை உள்ளது எனவும், தங்களை ஆலோசிக்காமல் ரிலீஸ் தேதி முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வாதத்தை எடுத்து வைத்தது. இதையடுத்து “நீதிமன்றத்தில் 7 கோடி ரூபாய் டெபாசிட் செய்யவேண்டும் என்றும் 48 மணி நேரத்துக்குள் படம் சம்மந்தமான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்யவேண்டும்” என நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இதனால் படம் ரிலீஸாகுமா அல்லது ஆகாதா என்ற குழப்பம் எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்