ஒரே படத்தில் சிரஞ்சீவி-சல்மான்கான்: தமிழ் இயக்குனரின் சாதனை!

Webdunia
புதன், 16 மார்ச் 2022 (10:06 IST)
ஒரே படத்தில் சிரஞ்சீவி-சல்மான்கான்: தமிழ் இயக்குனரின் சாதனை!
ஒரே படத்தில் தெலுங்கு பிரபல நடிகர் சிரஞ்சீவி மற்றும் பாலிவுட் பிரபல நடிகர் சல்மான் கான் ஆகியோர் இணைந்து நடிக்க உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்த படத்தை இயக்குனர் ஒருவர் இயக்கி வருகிறார் என்பது கூடுதல் சிறப்பு கூடிய செய்தியாகும் 
 
பிரபல இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்துவரும் காட்பாதர் என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. 
 
இந்த படம் மோகன்லால் நடித்த சூப்பர் ஹிட் படமான புலிமுருகன் என்ற படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ஒரே படத்தில் சிரஞ்சீவி மற்றும் சல்மான்கான் இணைந்து நடிப்பது திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்