அடிமையை போல் ஏன் பயப்படுகிறீர்கள்: சிரஞ்சீவிக்கு ராம்கோபால் வர்மா கேள்வி!

வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (19:32 IST)
அடிமையைப் போல் ஏன் பயப்படுகிறீர்கள் என மெகா ஸ்டார் சிரஞ்சீவியை பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா கேள்வி எழுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
ஆந்திர மாநிலத்தில் உள்ள திரையுலக பிரச்சினைகள் குறித்து முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி யுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சிரஞ்சீவி மகேஷ்பாபு பிரபாஸ் எஸ்எஸ் ராஜமவுலி உள்ளிட்டோர் சந்தித்தனர்
 
 இந்த சந்திப்பை அடுத்து பேட்டி அளித்த சிரஞ்சீவி ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரச்சினைகளை முதல்வர் தீர்த்து வைப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார் என்று கூறினார் 
இந்த நிலையில் இந்த சந்திப்பு குறித்து கருத்து கூறிய ராம் கோபால் வர்மா  நாங்கள் மெகா ஸ்டார் சிரஞ்சீவியை வீரரராக பார்த்திருக்கிறோம் ஆனால் ஒரு அடிமை போல பயந்துகூனி குறுகி நின்றது எங்களை காயப்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பு மெகா யாசகம் கேட்கும் சந்திப்பு போல் உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார் 
 
ராம்கோபால் வர்மாவின் இந்த சர்ச்சைக்குரிய கருத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்