தமிழ்நாட்டில் அஜித்தான் நம்பர் 1… மூத்த பத்திரிக்கையாளர் கருத்து!

Webdunia
சனி, 17 டிசம்பர் 2022 (09:34 IST)
வாரிசு படத்திற்கு அதிக திரையரங்குகள் கிடைக்காத நிலையில் உதயநிதியை சந்திக்க இருப்பதாக தயாரிப்பாளர் தில் ராஜூ தெரிவித்திருந்தார்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு ரிலீஸாக உள்ள வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரண்டு படங்களுக்கும் சம அளவில் திரையரங்குகள் ஒதுக்கப்படுகின்றன. இதுகுறித்து பேசியுள்ள வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜூ “துணிவு படத்தின் விநியோகஸ்தர் ரெட் ஜெயண்ட் மூவிஸ் உரிமையாளர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாரிசு படத்திற்கு அதிக திரையரங்குகள் வேண்டுமென கேட்க போகிறேன். தமிழ்நாட்டில் விஜய்தான் நம்பர் 1” என்று கூறியுள்ளார்.

தில் ராஜுவின் இந்த பேச்சு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரிய விவாதத்தையே ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மூத்த சினிமா பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு “ஆந்திராவில் இருந்து படம் எடுத்து என்ன வேண்டுமானாலும் சொல்லலாமா?.. விஜ்ய்யின் படங்கள் வெளிநாட்டில் வேண்டுமானால் வசூல் அதிகமாக இருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அஜித்தான் வசூலில் நம்பர் 1 “ என ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்