இந்தியன்2 படத்தில் அதிரடி மாற்றம்...

Webdunia
சனி, 1 செப்டம்பர் 2018 (11:00 IST)
கமல்ஹாசன் நடித்து 1996–ல் வெளியாகி வெற்றி பெற்ற இந்தியன்.

 
இந்த படத்தில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கமல்ஹாசன் கொலை செய்வது போல் கதை இருந்தது. இந்நிலையில் ஷங்கர் இயக்கும் இரண்டாம் பாகம் ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு எதிரான கதை என்று கூறப்படுகிறது இதிலும் கமல்ஹாசன் இரு வேடங்களில் நடிப்பதாக தகவல்.
 
இந்தியன் தாத்தா தீவிபத்தில் சிக்கி இறந்துவிட்டதாக போலீஸ் அதிகாரிகள் கருதுவது போன்றும் அவரோ வெளிநாட்டுக்கு தப்பிச்சென்று போன் செய்வது போன்றும் முதல் பாகத்தை முடித்து இருந்தனர். இரண்டாம் பாகத்தில் அவர் இந்தியா திரும்பி வந்து ஊழல் அரசியல்வாதிகளை வர்ம கலையால் வீழ்த்துவதுபோல் திரைக்கதை அமைத்துள்ளனர். 
 
முதல் பாகத்தில் வந்த இந்தியன் தாத்தா கதாபாத்திரத்தை இரண்டாம் பாகத்தில் மேலும் வயதானவர்போல் மாற்றி இருப்பதாக கூறப்படுகிறது. வெளிநாட்டு மேக்கப் கலைஞர்களை வைத்து கமல்ஹாசனின் வயதான தோற்றத்துக்கு விசே‌ஷ மேக்கப் போடுகின்றனர். இளம் கமல்ஹாசன் வேடம் முதல் பாகம்போல் வில்லத்தனமாக இருக்காது என்றும், அவரும் ஊழலுக்கு எதிராக போராடுபவர் போலவே வருவார் என்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்